மர்மர் சினிமா விமர்சனம் : மர்மர் – இது திகில் படமா இல்லை காமத்திலும் போதையிலும் இளைஞர்களை சீரழிக்கும் படமா என்ற கேள்வியை எழுப்புகிறது | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் – நடிகைகள் :
ரிச்சி கபூர் – ரிஷி
தேவ்ராஜ் ஆறுமுகம் – மெல்வின்
சுகன்யா ஷண்முகம் – அங்கிதா
யுவிகா ராஜேந்திரன் – காந்தா
அரியா செல்வராஜ் – ஜெனிபர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் : ஹேம்நாத் நாராயணன்
தயாரிப்பாளர் : பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் : எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்
படத்தொகுப்பு: ரோஹித்
ஒலி வடிவமைப்பு: கேவ்ய்ன் பிரெடெரிக்
தயாரிப்பு வடிவமைப்பு: ஹாசினி பவித்ரா
உடை : பிரகாஷ் ராமசந்திரன்
ஸ்பெஷல் மேக்கப்: செல்டன் ஜார்ஜ்
சண்டை : ஷார்ப் ஷங்கர்
மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்
சென்னையைச் சேர்ந்த அமானுஷ்ய யூடியூபர்கள் மெல்வின் (தேவ்ராஜ் ஆறுமுகம்), ரிஷி (ரிச்சி கபூர்), அங்கிதா (சுகன்யா ஷண்முகம்), ஜெனிஃபர் (அரியா செல்வராஜ்) என நான்கு பேர் கொண்ட குழு காத்தூர் கிராமத்தில் உள்ள ‘ஏழு சப்த கன்னிகள்” மற்றும் ஒரு பழிவாங்கும் மனப்பான்மையுடன் திரியும் மங்கை என்ற சூன்னியகாரி ஆவி பற்றிய வீடியோ டாக்குமெண்ட் எடுக்க காத்தூர் கிராமத்திற்கு செல்கிறார்கள். இங்கு அவர்களை அந்தப் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்ல இருந்த ஒரு உள்ளூர் வழிகாட்டி எதிர்பாராத விதமாக பாம்பு கடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள் காந்தா (யுவிகா ராஜேந்திரன்) இவர்களுக்கு உதவ முன்வருகிறார். காந்தாவின் உதவியுடன் அங்கு ஒரு மூதாட்டியின் மூலம், மனித பலி கொடுத்ததாக கூறப்படும் மங்கை என்ற பெண்ணின் ஆவியால் காட்டுக்குள் செல்லும் மக்களை வேட்டையாடப்படுவது, மற்றும் பௌர்ணமி அன்று ஆற்றில் குளிக்கும் ஏழு கன்னிப்பெண்கள் பற்றிய கதையை கூறியதுடன் மங்கை பெயரை யாரும் உச்சரிக்க கூடாது என்றும் அவர்களை எச்சரிக்கிறார். மூதாட்டியின் எச்சரிக்கையை மீறி சபிக்கப்பட்ட அந்த காட்டை ஆராய தங்கள் கேமராக்களுடன் இந்த நான்கு பேர் கொண்ட குழுவுடன் அவர்களுக்கு வழிகாட்டியாக அந்த ஊர் கன்னிப் பெண் காந்தாவும் காட்டிற்குள் நுழைகிறார்கள். காட்டில் இரவு நேரத்தில் அவர்கள் ஒரு ஓஜா பலகையைப் பயன்படுத்தி ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிவு செய்யும் போது, அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். இருளில் அவர்கள் பயங்கரமான ஒலிகள், காலடிகள் மற்றும் மர்மமான முறையில் ஏற்படும் அமானுஷ்ய அசைவுகளால் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. விஷயங்கள் அவர்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. அவை என்ன? அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அவர்கள் ஒவ்வொருவராக மாட்டிக்கொள்ளும் போது என்ன ஆனார்கள் என்பது தான் மீதி கதை.
மெல்வின் (தேவ்ராஜ் ஆறுமுகம்), ரிஷி (ரிச்சி கபூர்), அங்கிதா (சுகன்யா ஷண்முகம்), ஜெனிஃபர் (அரியா செல்வராஜ்), (காந்தா (யுவிகா ராஜேந்திரன்) வை தவிர) மற்ற அனைவரும் இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒரு சில நவநாகரீக இளைஞர்களின் பிரதிபளிப்பை (அசால்ட்டான தைரியம், கஞ்சா, மது, மற்றும் பொது வெளியில் அச்சமற்ற செக்ஸ்) இருபாலினரும் அப்படியே வெளிப்படுத்தியுள்ளனர். என்றாலும் காட்டுக்குள் அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதை உணரும் போது பயம், பதற்றம் என அனைத்தையும் முகபாவனை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ரிஷி (ரிச்சி கபூர்) மற்றும் கிராமத்து பெண் காந்தா (யுவிகா ராஜேந்திரன்) ஆகிய இருவரின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது.
அடர்ந்த கரடுமுரடான காட்டில் அதுவும் இருட்டில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளை படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒளிப்பதிவு மற்றும் அந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்த கேவ்ய்ன் பிரெடெரிக் ஒலி வடிவமைப்பு ஆகிய இருவரின் கடின உழைப்பு பளீச்சென தெரிகிறது. ஆனால் எடிட்டர் ரோஹித் படத்தொகுப்பும் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் காட்சி அமைப்பும் எந்த இடத்திலும் ஒரு திகில் படம் ஏற்படுத்தும் பயம் எந்த ஒரு காட்சியிலும் நம்மால் உணர முடியவில்லை.
திகில் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும், சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற “பாராநார்மல் ஆக்டிவிட்டி” மற்றும் “தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்” போன்ற திரைப்படங்கள் வரிசையில், தமிழ் திரையுலகில் ஃபவுண்ட் ஃபூட்டேஜ்’ என்று சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்ட ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” திரைப்படத்தை புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்காக உருவாகி இருப்பதாக நினைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன். பெண்களின் அசால்ட்டான தைரியம், சக நண்பர்களுடன் போதை ஏற்படுத்தும் புகை பிடித்தல், சகஜமாக மது அருந்துவது, மற்றும் நண்பர்கள் முன்னிலையில் காமத்தை வெளிப்படுத்தல் போன்றவற்றை களுக்கு திரைக்கதையில் முழு கவனம் செலுத்தி திகில் ஏற்படுவது போல் பில்டப் கொடுத்து தொய்வை ஏற்படுத்தும் காட்சிகளை அமைத்த இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் கதையிலும் காட்சி அமைப்பிலும் அதிக கவனம் செலுத்தி இருந்தால், இசை மற்றும் பின்னணி இசை இல்லாமல் ஒலிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.
மொத்தத்தில் எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பிரபாகரன் தயாரித்திருக்கும் மர்மர் – இது திகில் படமா இல்லை காமத்திலும் போதையிலும் இளைஞர்களை சீரழிக்கும் படமா என்ற கேள்வியை எழுப்புகிறது.