மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் விமர்சனம்

0
62

மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் விமர்சனம்

போர்ச்சுகீசியர்களால் கண் எதிரே தன் தாய் கொல்லப்பட, சிறு வயது குஞ்ஞாலி மரைக்காயர் தன் சித்தாப்பாவுடன் தப்பித்து, அதன் பின் அவர்களை வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அசைக்க முடியாத போராளியாக உருவேடுக்கிறார்.எதிரிகளிடமிருந்து பொருட்களை பறித்து எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதால் செல்வாக்கடைகிறார். சாமுத்ரி அரசும், அவர்கள் கீழ் இருக்கும் சிற்றரசர்களுக்கும் குஞ்ஞாலியின்; உதவி தேவைப்பட, கடற்படை தளபதியாக அவரை நியமித்து போர்ச்சுகீசியர்களுடன் மோத வெற்றி வாகை சூடுகிறார் குஞ்ஞாலி. அதன் பின் நல்ல புர்pதலுடன் நட்புறவுடன் சாமுத்ரி அரசாங்கத்தில் வாழ்கிறார். ஒரு காதல் பிரச்சினையால் சாமுத்ரி அரசுக்கும், குஞ்ஞாலிக்கும் இருக்கும் நட்பு முறிந்து பகையாகிறார். இதை சாமார்த்தியமாக பயன்படுத்தும் போர்ச்சுகீசியர்கள் சதி வேலை செய்து குஞ்ஞாலியை பிடிக்கின்றனர். அதன் பின் நடந்தது என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

இதில் குஞ்;;ஞாலியாக இயல்பாக வாழ்ந்திருக்கிறார் மோகன்லால், பிரபு, அர்ஜுன், நெடுமுடி வேணு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், சுகாசினி, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், இளவயது குஞ்ஞாலியாக பிரணவ் மோகன்;லால் மற்றும் பலர் படத்தின் முக்கிய பங்கு வகித்து நடிப்பில் அசத்தியுள்ளனர்.

படத்துக்கு இசை ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரபேல் ஆகியோர் வரலாற்றுப் படத்துக்கு தேவையானதை கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில், முதல் பாதியின் முடிவில் போர்த்துக்கீசியப் படைகளை மரைக்காயரின் படைகள் வெல்லும் காட்சிகள் அதே போல இரண்டாம் பாதியில் சாமூத்ரி படைகளுக்கும் மரைக்காயர் படைகளுக்கும் நடக்கும் யுத்தமும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தும் சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டி பார்வையாளரை பிரமிக்க வைக்கின்றன.

கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் கடற்படை தளபதி குஞ்ஞாலி மரைக்காயரின் வரலாற்று வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதையில் உலகத் தர கிராபிக்ஸ், மிகச்சிறந்த நடிகர்கள், பின்னணி இசை என ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்துக் காரணிகளும் இருந்தும் முதல் பாதி திரைக்கதையின் வேகம் குறைவாக இருப்பதும், இரண்டாம் பாதியில் காதல், பழி வாங்குதல் என்று தடம் மாறி செல்லும் போது சோர்வடைந்தாலும், யுத்தக் காட்சிகள் தான் விறுவிறுப்பையும், பிரம்மிப்பையும் கொடுத்து நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. உணர்வுப்பூர்வமான படங்களோடு  வரலாற்று கதைகளையும் இயக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை காட்சியமைப்பு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் கோட்டைகள், போர்க்களங்கள், கப்பல்கள் என ஒரு வி{வல் ட்ரீட்டை அளித்திருக்கும் ப்ரியதர்ஷனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆன்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்துள்ள பிரம்மாண்ட படம் மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் அனைவரையும் தியேட்டருக்கு வரவழைத்து ரசிக்க வைக்கும்.