மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்

0
19

மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரஜினி சிகிச்சையுடன் சிறிது நாட்கள் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்பும். அதன் பிறகு அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.