மதுரை மணிக்குறவர் விமர்சனம் : டைம் கிடைத்தால் பார்க்கலாம்

0
98

மதுரை மணிக்குறவர் விமர்சனம் : டைம் கிடைத்தால் பார்க்கலாம்

காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பு.காளையப்பன் தயாரித்து வில்லனாக நடிக்கும் படம் மதுரை மணிக்குறவர். ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம், மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டது.  மாதவிலதா கதாநாயகியாகி நடித்திருக்கிறார்.

ராதாரவி, சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், டெல்லி கணேஷ், பெசன்ட்நகர் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர், கவுசல்யா, சுஜாதாஈ அஸ்மிதா ஆகியோருடன் தயாரிப்பாளர் ஜி.காளையப்பனும் நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

.சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு வி.டி.விஜயன்,கணேஷ்பாபு படத்தொகுப்பு கவனித்திருக்கின்றனர். ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினா, அபிநயஸ்ரீ நடனத்தை அமைத்திருக்கிறார்கள். வெற்றி விஜய் வசனம் எழுதியிருக்கிறார். கதை. திரைக்கதை, இயக்கம் – ராஜரிஷி, மக்கள் தொடர்பு – வெங்கட்.

அண்ணன் தம்பி இருவர் தங்களது பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி அதிர்ச்சியில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள். அநாதையாக்கப்பட்ட அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை தமபி மனைவி வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் வளர்க்கிறார். ஹரிக்குமார் (தண்டல் மணி)  மதுரையில் உள்ள மார்கெட்டில் குறைந்த வட்டிக்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் பிஸினஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வருகிறார். மக்களிடம் அதிகம் வட்டிக்கு பணம் வாங்கும் காளையப்பனுடன் மோதல் ஏற்படுகிறது. மார்கெட்டில் நடக்கும் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிக்குமாருக்கு (தண்டல் மணி) ஏரியா எம் எல்ஏசுமன் மற்றும் சாராய வியாபாரி சரவணனுடன்  மோதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயத்தில், ஹரிக்குமாருக்கு தனது மாமன் மகளுக்குமான திருமண ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. எம்எல்ஏ சுமனின் சூழ்ச்சியால் திருமணம் நின்றுவிட, மாதவிலதாவை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் ஹரிக்குமார். திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. திருமண நாளில் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட கொலைக் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரியாக இன்னொரு ஹரிகுமார்(ராஜா) அந்த ஊருக்கு வருகிறார். விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரியவர அவர் பெரிதும் மனமுடைகிறார். அதே நேரம் தன் கூடப் பிறந்தவர் மதுரையில் இருக்கிறார் என தெரிந்த பின் பெரும் மகிழ்ச்சி அடைந்து பார்க்க ஊருக்கு வருகிறார்.அங்கே தன் அண்ணன் இறந்துவிட்டார் என்பதை கேள்விப்பட இந்த கொலைக் குற்றங்களை செய்தது யார்..? தன் உடன் பிறந்த சகோதரருக்காக என்ன தியாகம் செய்தார்? என்பதே மீதி கதை.

நாயகன் ஹரிக்குமார் அண்ணன் தம்பி என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

அழகாக இருக்கும் நாயகி மாதவிலதா நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். குணச்சித்திரங்களாக ராதாரவி, கௌசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் ஆகியோர் வந்து போகிறார்கள்.

இளையராஜாவின் இசையில், பாடல்கள் இந்த படத்திற்கு பெரிய பலம்.

மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வழக்கமான ஹீரோ வில்லன் வைத்து திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜரிஷி.

மொத்தத்தில் காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பு.காளையப்பன் தயாரித்து இருக்கும் ‘மதுரை மணிக்குறவர்” டைம் கிடைத்தால் பார்க்கலாம்.