மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார்பில் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

0
213

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார்பில் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

இந்தியாவில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் & KGISL Educational Institutions கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கம் 3 நாட்களில் 20000+ இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல நற்பணிகளும் செய்து வருகிறார் மேலும் அவரது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி தரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது கோவை மாநகரில் பிரமாண்டமாக இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் இந்தியாவை சார்ந்த அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம்

இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 2022- டிசம்பர் மாதம் 2,3,4 ஆம் தேதிகளில் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 Sector-ஐ சேர்ந்த, 200+ நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 20000+ வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை தேடும் இளைஞர்கள் / நிறுவனங்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். இதில் எந்த கட்டணமும் இல்லை முழுக்க சமூக சேவையாகவே நடைபெறுகிறது.

கடந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் 50 நிறுவனங்களுடன் ஆயிரத்திற்கும் மேலான வேலை தேடும் நபர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த சேவை ஒருநாள் வேலை வாய்ப்பு சேவையாக அல்லாமல், வருடத்தின் அனைத்து நாட்களும் இந்த இயக்கத்தின் சேவை மக்கள் செல்வன் வழியில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம்
இது நாள் வரை 1,20,243 நபர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.