ப்ளாக்பஸ்டர் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய ‘டாக்டர்’ படக்குழு

0
35

ப்ளாக்பஸ்டர் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய ‘டாக்டர்’ படக்குழு

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 54 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள். இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தில், வினய், பிரியங்கா மோகன், யோகி பாபு, தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர். கொரோனா சூழலில் அதிக வசூல் சாதனையை ’டாக்டர்’ நிகழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், டாக்டர் படத்தின் வெற்றிக்கொண்டாத்தை சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர் கவின், ரெடின் கிங்ஸ்லி,வினய் உள்ளிட்டப் படக்குழுவினர் ‘டாக்டர் ப்ளாக்பஸ்டர்’ என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டி உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.