போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி!

0
29

போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அருகே தனுஷ் புதிய வீடு ஒன்றை கட்டவுள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் ஒரு வீடு கட்ட இருப்பதாகவும் அதற்காக அவர் தொடர்ச்சியாக ஒரு பெரிய நிறுவனத்தின் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று தனது புதிய வீட்டிற்கான பூமி பூஜையை தனுஷ் நடத்தினார். இந்த பூமி பூஜையில் ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்று பூமி பூஜை நடந்ததை அடுத்து மிக விரைவில் இந்த வீடு கட்டி முடிக்கப்படும் என்றும் இந்த வருட இறுதியிலேயே தனுஷ் புதிய வீட்டில் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.

இன்று நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ரஜினியை ஆரோக்கியமான சூழ்நிலையில் பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை கமெண்ட்ஸ் பகுதியில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.