பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு

0
54

பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு

பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார். தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்’ (PUBG) படத்தையும் இயக்குகிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பப்ஜி படத்திற்கு இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே தாதா 87 படத்தில் இவரது இசையில் ‘ஆறடி ஆண்டவன்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

தற்போது PUBG படத்திற்காக விஜய் ஸ்ரீ ஜி-யின் வரிகளுக்கு இசையமைத்துள்ளார். முண்டாசு கவி பாரதியாரின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ வரிகளுடன் பாடலைத் துவக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.

இப்பாடலை, பிரபல ராப் இசைக் கலைஞர் ஃபைவ் ஓ (Five O )பாடியிருக்கிறார். இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய ஆல்பங்கள் Aizejot, CitadaksReps, Nothing Compares, Nesteijties, Vis Man Ir Arlauts மிகவும் பிரபலமானவை. சர்வதேச புகழ் பெற்ற ஃபைவ் ஓ, பப்ஜி படத்தின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

படத்தில் புரட்சி செல்வி ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன், அனித்ரா நாயர் , ஆராத்யா, சான்ரியா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை
இசை வெளியீட்டில் தனி ட்ரெண்ட்டை ஏற்டுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது.

பாடல்கள், லாட்வியாவில் உள்ள ஜெனிஸ் ஸ்ட்ராம் ஸ்டூடியோஸ் (Janis Straume Studios) மற்றும் சிங்கப்பூரில் உள்ள அர்டாண்ட் ஸ்டீடியோஸில் (Ardant Studios) பதிவு செய்யப்படவுள்ளன. தீபாவளியன்று பாடல்கள் வெளியாகிறது. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இசை சரவெடி தீபாவளி தினத்தில் ஆரம்பமாகிறது. படம், உலகமெங்கும் பொங்கலன்று வெளியாகிறது.