’பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல்

0
48

‘பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ பாடலை குடியரசு தினத்தையொட்டி படக்குழு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் தனுஷும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.