பேய் மாமா விமர்சனம்

0
49

பேய் மாமா விமர்சனம்

மூலிகை மகத்துவம் நிறைந்த நூறு ஏக்கர் பங்களாவை தன் வசப்படுத்த துடிக்கும் பணக்கார கும்பல், அவர்களை மீறி அதை விற்க துடிக்கும் பங்களாவின் சொந்தக்காரர். பேய் இல்லா பங்களா என்று நிரூபிக்க புறப்படும் இரண்டு குடும்பங்கள். அந்த பங்களாவில் இருக்கும் பேய்கள் அவர்களை தன் வசப்படுத்தி பேயாக்கி வில்லன்களை எதிர் கொண்டு பழி வாங்குவதே பேய் மாமாவின் கதைக்களம்.
யோகிபாபு(கோழி குமார்), மாளவிகா மேனன் (பூஜா), செந்தி (கோழி குமார்  அம்மா),மீனாள் (கோழிக்குமார் அக்கா), ராகுல் தாத்தா (கோழி குமார் தாத்தா), ரமேஷ் கண்ணா (கோழி குமார் மாமா), லொள்ளுசபா மனோகர் (குருநாதர்), வையாபுரி (பூஜா அப்பா), சுஹாசினி (பூஜா அம்மா), அபிஷேக் (வைரமணி),பொன்குமரன் (எம் .எஸ்.ஆர்), காவியா சுரேஷ் (நிர்மலா), எம்.எஸ்.பாஸ்கர் (சேதுபதி , இமான் அண்ணாச்சி (பசுபதி), மொட்டை ராஜேந்திரன்(சேனாதிபதி), ரேகா (நிலவழகி),ரேஷ்மா (பசுபதி மனைவி) கோவை சரளா (செருப்படி சித்தர்),சாம்ஸ் (வெளக்கமார் சித்தர்) ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் இயன்ற அளவு நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், இசை – ராஜ் ஆர்யன், கலை – ஆர்.ஜனார்த்தனன், எடிட்டிங்  – பிரீத்தம், வசனம்  – சாய் ராஜகோபால் இவர்களது பங்களிப்பு சோடை போகவில்லை.
வில்லன்களை துரத்தி அடிக்க வியூகம் செய்யும் பேய்கள், அதில் பயமுறுத்தலை ஒதுக்கிவிட்டு, காமெடி நெடி துக்கலாக கொடுக்க நினைத்திருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கேற்ற காமெடி மிஸ்ஸிங் என்பதால் எதிர்பார்த்த சிரிப்பு புன்முறுவலோடு கடந்து போகிறது. ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகளின் கலவையாக கதைக்களத்தில் போதிய அழுத்தம் இல்லாததால் ஒருவித தோய்வோடு படம் நகர்கிறது. ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் அவர்களை திறம்பட கையாண்டிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கு பாராட்டும் கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் பாக்யா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்திருக்கும் பேய் மாமா குழந்தைகளை கவர நினைத்து அலட்டல் இல்லாமல் கடந்து போகிறது.