பெயரை நீக்கினால் விவாகரத்தா? பிரியங்கா தரப்பின் ‘நச்’ விளக்கம்!

0
59

பெயரை நீக்கினால் விவாகரத்தா? பிரியங்கா தரப்பின் ‘நச்’ விளக்கம்!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது பெயருக்கு பின்னால் சேர்த்திருந்த கணவர் பெயரை, திடீரென நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து இந்திப் படங்களில் கவனம் செலுத்திய அவர், அங்கு முன்னணி நடிகை ஆனார். அங்கிருந்து ஹாலிவுட் படங்களிலும் அமெரிக்க டிவி தொடர்களிலும் நடித்தார். அப்போது தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ்-ஐ காதலித்தார்.

இருவரும் கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிறகு தனது பெயருக்கு பின்னால், கணவர் பெயரையும் சேர்த்து ’பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்’ என்று என்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பயன்படுத்தி வந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ஏதாவது கருத்துக்களையும் புகைப் படங்களையும் வெளியிட்டு வருவார். இதனால் அவர் பக்கங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, தனது பெயருக்குப் பின்னால் சேர்த்திருந்த ஜோனாசையும் சோப்ராவையும் திடீரென நீக்கி இருக்கிறார். இது ரசிகர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விரைவில் ஜோனாசை விவாகரத்து செய்ய இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரியங்கா சோப்ராவுக்கு நெருங்கியவர்கள் இதை மறுத்துள்ளனர்.

அவர் தோழி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், இந்த விவாகரத்து வதந்திகள் அனைத்தும் வேடிக்கையானது. அவர் ஜோனாசையும் மட்டுமல்ல, சோப்ராவையும்தான் சமூக வலைதளப் பக்கங்களில் நீக்கி இருக்கிறார். அவர் எதிர்கால திட்டத்துக்காக அந்தப் பெயர்களை நீக்கி இருக்கிறார். மற்றபடி அவர் விவாகரத்து குறித்து வரும் தகவல்களில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.