‘பெட்ரோமாக்ஸ்” திரை விமர்சனம்

0

‘பெட்ரோமாக்ஸ்” திரை விமர்சனம்

ரேட்டிங்

நடிப்பு – தமன்னா, யோகிபாபு, முனிஷ்காந்த், சத்யன், டிஎஸ்கே, பிரேம், காளி வெங்கட் , கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீஜாரவி, பெபி மோனிக்கா, பேய் கிருஷ்ணன், மைம் கோபி, லிவிங்ஸ்டன்,
தயாரிப்பு – ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்
இயக்கம் – ரோகின் வெங்கடேசன்
இசை – ஜிப்ரான்
நேரம் – 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் – 3/5

பயமுறுத்தும் பேய்ப் படங்களுக்கு மத்தியில் அப்பப்போ சிரிக்க வைக்கும் பேய்ப் படங்களும் வருகின்றன. அந்த வரிசையில் நம்மை 2 மணி நேரம் 8 நிமிடம் முழுக்க முழுக்க காமெடி கலந்து சிரிக்க வைக்க ஈகிள்ஸ் ஐ புரொடக் ஷன் தயாரித்து வந்துள்ள பேய் படம் தான் இந்த பெட்ரோமாக்ஸ்.

மலேசியாவில் வசிக்கும் ப்ரேம், தன்னுடைய பெற்றோர் கேரளா வெள்ளத்தில் இறந்துவிட்டதாகக் கூறி, சென்னை அருகேயுள்ள உள்ள வீட்டை விற்க முயற்சி செய்கிறார். அந்த வீட்டில் பேய் இருப்பதாக கதை கட்டிவிட்டு அதைக் குறைந்த விலைக்கு வாங்க திட்டமிடுகிறார் மைம் கோபி..ஆனால், உண்மையில் அந்த வீட்டில் தமன்னா, அவருடைய அப்பா, வீட்டு சமையல்காரர், அவருடைய மகள் ஆகியோர் பேயாக இருக்கிறார்கள். இவர்கள் மைம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஆனால் ப்ரேம் வீட்டில் பேய்கள் இருப்பதை நம்ப வில்லை. அந்த வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபீத்துக் காட்ட முனிஷ்காந்த், பிரேமுக்கு உதவி செய்ய வருகிறார்.வீட்டில் பேய்கள் இல்லையென நிரூபித்தால் அதிக கமிஷன் தருவதாக முனீஷ்காந்திடம் கூறுகிறார் ப்ரேம். பணத்தேவை இருப்பதால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகியோருடன் அந்த வீட்டிற்கு சென்று நான்கு நாட்கள் தங்கி பேய் இல்லை என்பதைப் புரிய வைக்க முயற்சிக்கிறார். வீட்டில் உள்ள பேய்கள் முனிஷ்காந்த்தையும் அவரது ஆட்களையும் விரட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் நால்வரையும் அங்குள்ள பேய்கள் விரட்டினார்களா?? அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்?  உண்மையிலேயே கேரளா வெள்ளத்தில் இறந்தது ப்ரேம் பெற்றோர்கள்தானா? அந்த வீட்டில் அவர்கள் பேயாக இருப்பது ஏன்? என்கிற கேள்விகளுக்கு விடைதான் பெட்ரோமாக்ஸ் படத்தின் மீதிக் கதை.

அழகு போய் தமன்னா கொடுத்த கதாபாத்திரத்தை கண கச்சிதமாக செய்துள்ளார். படத்தின் கதாநாயகன் முனிஷ்காந்த் தான்.
தமன்னாவைவிட முனீஷ்காந்துக்குத்தான் இந்தப் படத்தில் அதிகக் காட்சிகள். காளி வெங்கட், சத்யன் திருச்சி சரவணகுமார் இவர்கள் நாலுபேரும் சேர்ந்து இடைவேளைக்குப் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக திருச்சி சரவணகுமரின் மிமிக்ரி நகைச்சுவைக் காட்சிகள் சுவாரசியமாக இருந்தது.இந்த நாள்வர் கூட்டணி. அந்தக் காட்சிகள்தான் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம்.
நல்லவர் போல் தோன்றி வில்லனாக மாறும் பிரேம், மைம் கோபி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீஜாரவி, பெபி மோனிக்கா, பேய் கிருஷ்ணன் ஆகியோர் தங்களது பங்களிபபை சிறந்த நடிப்பின் மூலம் கொடுத்துள்ளார்கள்.

யோகிபாபு, லிவிங்ஸ்டன், வந்து போகிறார்கள்.

தொழில்நுட்பக் கூட்டணியான டேனி ரேமண்டின் ஒளிப்பதி, ஜிப்ரானின் இசை, லியோ ஜான்பால் எடிட்டிங், வினோத்ராஜ்குமார் கலை, ஜி;ஆர்சுரேந்திர நாத் வசனங்கள், அனுராதரவின் பாடல்கள், ராதிகா மாஸ்டரின் நடனம் மற்றும் பேட்பாய் ஹரிதினேஷின் சண்டைகாட்சி , இவர்கள் அனைவருடைய உழைப்பு ஒரு பேய்ப் படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் கச்சிதமாக சரியாகச் செய்திருக்கிறார்கள்.

‘பெட்ரோமாக்ஸ் பெயரை கேட்டாலே கவுண்டமணி செந்தில் காமெடி தான் பலரது நினைவுக்கு வரும். தெலுங்கில் வெளிவந்து 15 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆப்பீஸ் ஹிட்டான ஆனந்தோ பிரம்மா படத்தின் தமிழ் ரீமேக்கை நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ரோகின் வெங்கடேசன் . முனீஷ்காந்த் ஃப்ளாஷ்பேக் சீனில் அவ்வளவு சிரிப்பு வரவில்லை. அந்தக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.

மொத்தத்த்pல் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக குழந்தைகளை கவரும் திகில் குறைந்த கலகப்பான சிரிப்பு பேய் படம் ‘பெட்ரோமாக்ஸ்”.

நம்ம பார்வையில் ஈகிள்ஸ் ஐ புரொடக் ஷன் தயாரித்திருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.