புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்… வைரலாகும் வீடியோ

0
58

புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்… வைரலாகும் வீடியோ

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவள்ளி பாடலுக்கு, அல்லு அர்ஜுன் நடனத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வரும் ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஸ்ரீ வள்ளி பாடலுக்கு, அல்லு அர்ஜுனின் நடன ஸ்டெப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் போட்டுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

இதனைப் பார்த்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனும், வார்னர் வீடியோவுக்கு கமென்ட் செய்துள்ளார். வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

சில ரசிகர்கள், அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் டேவிட் வார்னர் வில்லனாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.