புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

0
38

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

சென்னை, கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சக நடிகர்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்றும் தவசி வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருந்தார். அத்துடன் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் உள்ள தவசியின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபசி, சிம்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பண உதவி செய்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தவசியின் உடல்நிலை குறித்து தொலைப்பேசியில் நலம் விசாரித்தார். மேலும் சமூகவலைதளங்களில் நடிகர் தவசி நலம்பெற வேண்டி ஏராளமானோர் வேண்டுதல்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 60. தவசியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.