புயல் பாதிப்பு மத்தியில் நடனமாடி போட்டோஷூட் நடத்திய நடிகை – நெட்டிசன்கள் கண்டனம்

0
18

புயல் பாதிப்பு மத்தியில் நடனமாடி போட்டோஷூட் நடத்திய நடிகை – நெட்டிசன்கள் கண்டனம்

டவ்-தே புயல் மும்பையை புரட்டிப் போட்ட நிலையில், தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

கடும் சூறாவளிக் காற்றின் காரணமாக, மும்பையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றின் காரணமாக சாலையில் விழுந்த மரங்களுக்கு இடையே நடனமாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை தீபிகா சிங் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். புயலின் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில், இதுபோல வீடியோ வெளியிடுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் சாலையில் நடனமாடுவதா எனவும் நடிகையை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

https://www.instagram.com/p/CPARk2uhj9O/