புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகி இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை “பிறர் தர வாரா”

0
210

புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகி இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை “பிறர் தர வாரா”

சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர் . ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார்.” யார் அவர்கள் ? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது ” இப்படி விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு
ஏ.ஆர்.காமராஜ் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எழுதி நறுக்கான வசனம் தீட்டி தனது ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபீசர் வேடமேற்று அருமையாக இயக்கி உள்ளார்.

சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ் , சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

டேவிட் – கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.

திரையரங்குகள் திறந்ததும் திரையிட தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.ஆர்..காமராஜ் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

விஜயமுரளி
PRO