பீஸ்ட்-100 நாள் ஷூட்டிங்: வைரலானது நெல்சன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோ

0
98

‘பீஸ்ட்’-100 நாள் ஷூட்டிங்: வைரலானது நெல்சன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோ

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம், ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே ஹீரோயி னாக நடிக்கிறார். செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி, இன்றோடு (நவ.28) 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

இதைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குநர் நெல்சன், ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ‘இந்த அற்புதமான மனிதர்களுடன் படப்பிடிப்பு, 100 நாட்கள் ஜாலியாக கழிந்தது’என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இசைக் கருவிகளுடன் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் உட்பட படக்குழுவினர் குழுமியிருக்கும் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.