பீஸ்ட் விமர்சனம்: பீஸ்ட் ஒரு அபத்தமான எரிச்சலூட்டும் அதிரடி ஆக்ஷன் கலந்த ஏமாற்றம் தரும் டிராமா | ரேட்டிங் – 2/5

0
147

பீஸ்ட் விமர்சனம்: பீஸ்ட் ஒரு அபத்தமான எரிச்சலூட்டும் அதிரடி ஆக்ஷன் கலந்த ஏமாற்றம் தரும் டிராமா | ரேட்டிங் – 2/5

நடிப்பு: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் பலர்
இயக்குனர்: நெல்சன் திலீப்குமார்
தயாரிப்பாளர்கள்: சன் பிக்சர்ஸ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
எடிட்டர்: ஆர். நிர்மல்

வீரராகவன் (விஜய்) ஒரு இந்திய ‘ரா” ஏஜென்ட். எந்த ஒரு ரகசியச் செயலையும் எளிதாகச் செய்யும் திறன் கொண்டவர். ஒருமுறை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பயங்கரவாதத் தலைவன் உமர் பரூக்கைப் பிடிக்க ஆபரேஷன் நடந்து அது வெற்றியடைந்தாலும் அதில் ஏற்படும் சிறு தவறுக்கு ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரா.. தொழிலை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு நிகழ்வில் ப்ரித்தியை (பூஜா ஹெக்டே) சந்திக்க அவரது சிபாரிசின் பேரில் நிறுவனத்தில் ஒரு மால் செக்யூரிட்டி வேலை செய்கிறார். அதே சமயம் அந்த மால் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. பயங்கரவாதிகள் ஷாப்பிங் மாலில் புகுந்து மக்களை பிணைக் கைதிகளாக பிடிக்கின்றனர். தலைவர் உமர் ஃபாரூக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது உமர் ஃபாரூக்கைப் பிடித்த ரா ஏஜென்ட் வீரா என்ன செய்தார்? உளவுத்துறை அதிகாரி அல்தாஃப் ஹ{சைனுடன் (செல்வ ராகவன்) வீரா ஒப்பந்தம் செய்து கொண்டது என்ன? பயங்கரவாதிகளின் கடத்தலுக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் என்ன தொடர்பு? வீரா அதை எப்படிக் கண்டுபிடித்தார்? கடைசியில் பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட பிணையக்கைதிகளை வீரா எப்படி காப்பாற்றினார்? என்பதே மீதிக்கதை.

ரா ஏஜெண்டாக ஒன் மேன் ஷோவால் தன் ஸ்க்ரீன் பிரசன்ஸால் முழுப் படத்தையும் தோளில் சுமந்து செல்கிறார் விஜய். விஜய் வழக்கம் போல் இரண்டு டான்ஸ் நம்பர்களிலும் மிக அருமை. அனைத்து ஆக்ஷன் காட்சிகளிலும் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் இருக்கிறார். மிக முக்கியமாக கிளைமாக்ஸில் மாஜி ரா ஏஜெண்டாக இருக்கும் ஹீரோ பாகிஸ்தான் சென்று அங்குள்ள தீவிரவாதிகளை தாக்கி உமர் ஃபாரூக்கை சிறைப்பிடிக்கிறார். எந்த கோணத்தில் யோசித்தாலும்.. லாஜிக் தெரியவில்லை விஜய். இருந்தாலும் விஜய் படத்தைக் காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கிறார், ஆனால் எழுத்து, இயக்கம் மற்றும் முக்கியமாக திரைக்கதை மிகவும் மந்தமானதாக இருப்பதால், அவரால் கூட படத்தைக் காப்பாற்ற முடியவில்லை, விஜய்க்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாக முடிந்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக அழகாக இருக்கும் பூஜா ஹெக்டே படத்தில் பெரிதாக எதுவும் செய்யவில்லை திரையில் ஏதோ இருப்பது போல் தெரிகிறது அவ்வளவு தான். அவரது கதாபாத்திரத்திற்கு இயக்குனர் நெல்சன் ஜஸ்டிஸ் செய்யவில்லை.

உளவுத்துறை அதிகாரி அல்தாப் ஹ{சைனாக வரும் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்த முயன்றுள்ளார், ஆனால் அது எடுபடவில்லை.

உள்துறை அமைச்சர் கேரக்டர், தீவிரவாதிகளின் தலைவன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் எரிச்சலூட்டுகிறது.

கொடுத்த காசுக்கு நடிக்க சொன்னால் ஓவர் ஆக்டிங் நடிப்பை கொடுத்து இம்சை படுத்துகிறார் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.

யோகி பாபு இருக்கார் ஆனால் இல்லை.

விடிவி கணேஷ் தனது நகைச்சுவை டைலாக் டெலிவிரியால் கவர்கிறார். மற்ற நடிகர்கள் அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

படத்தின் முக்கிய பலம் அனிருத்தின் இசை. பிஜிஎம் படத்தின் இன்னொரு பலம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆர்.நிர்மல் எடிட்டிங் சுமார். அன்பறிவின் ஸ்டண்ட்ஸ் ஓகே.

ஸ்டீரியோடைப்களை நம்பும் தமிழ் ஹீரோக்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தருகின்றனர். வழக்கமான ஃபார்முலாவுடன் வரும் திரைப்படங்களை ஆடியன்ஸ் வெறித்தனமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள். இப்போது அந்த வரிசையில் விஜய் படமும் இணைந்துள்ளது. இயக்குனர் நெல்சன் பிணையக்கைதி கதையில் சமீபத்தில் வந்த கூர்க்கா கதையை கலவையாக கலந்து த்ரில், டென்ஷன், எமோஷன் என எதுவும் இல்லா திரைக்கதை அமைத்து விஜய் கொடுத்த ஒரு சூப்பர் வாய்ப்பை வீணடித்துவிட்டார். அவர் விஜய்யை ஒரு ரா ஏஜெண்டாகவும் ஸ்டைலான அதிரடி அவதாரமாகவும் காட்ட முயன்று சில ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்து ஆங்காங்கே சில காட்சிகளைச் சேர்த்துள்ளார். இடைவேளைக் காட்சியும் சுவாரஸ்யமாகத் தெரியவில்லை. இரண்டாம் பாதியில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் சுலபமாக தெரிந்துகொள்வார்கள். கிளைமாக்ஸ{ம் மிகவும் வழக்கமானது. படத்தில் ஹீரோவுக்கு அடிக்கும் ஒரே டயலாக். க்ளைமாக்ஸ் நம்பமுடியாத வேடிக்கையானது – வீரா பாகிஸ்தானுக்குச் செல்கிறார், பயங்கரவாதத் தலைவரைப் பிடித்து, பாகிஸ்தான் வான்வெளி வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவருகிறார், போனஸாக அவர் சுகோய் போர் விமானங்களை இயக்குகிறார். என்ன கொடுமை… இது…. இயக்குனரே? நகைச்சுவையை உருவாக்கும் இயக்குனர் நெல்சனின் பலம் இந்த முறை வேலை செய்யவில்லை. அவரது முந்தைய படமான டாக்டரில் நகைச்சுவை நன்றாக வேலை செய்தது ஆனால் பீஸ்டில் தோல்வியடைந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. தீவிரவாதிகளை விஜய் சூட்கேஸ் போல் கட்டி ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி போல் இயக்குனர் நெல்சன் விஜய்யை ஒரே படத்தில் தூக்கி கிழே போட்டு விட்டார்.

மொத்தத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் ஒரு அபத்தமான எரிச்சலூட்டும் அதிரடி ஆக்ஷன் கலந்த ஏமாற்றம் தரும் டிராமா. | ரேட்டிங் – 2/5