பீஸ்ட் படத்தில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சி!

0
19

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சி!

’பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சி குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.

மாஸ் நடிகர்களின் படங்களில் அறிமுகக் காட்சி என்பது கிளைமாக்ஸ் அளவுக்கு முக்கியமானது. துப்பாக்கி போன்ற சில படங்களில் பாடல் காட்சியுடன் விஜய்யின் அறிமுகக் காட்சி இருந்தது. சில படங்களில் சண்டைக் காட்சி. அதிலும், போக்கிரி படத்தில் வரும் விஜய்யின் அறிமுகக் காட்சி இன்றும் அவரது ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். ’பீஸ்ட்’ படத்தில் அப்படியொரு சண்டைக் காட்சியை அமைத்துள்ளாராம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

இந்த அதிரடியான சண்டைக் காட்சியை சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் (அன்பு – அறிவு) அமைத்துள்ளனர். இவர்கள் தான் கமலின் ’விக்ரம்’ படத்துக்கும் சண்டை இயக்குனர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

’பீஸ்ட்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்த நிலையில், அடுத்த மாத ஆரம்பத்தில் சென்னையில் ஒரு பாடல் காட்சியை முதலில் எடுக்க உள்ளனர். தெலுங்கில் ’ஆல வைகுந்தபுரமுலு’ படத்தின் நடனங்களை அமைத்த ஜானி மாஸ்டர் இந்தப் பாடல் காட்சிக்கும் நடனம் அமைக்கிறார். அத்துடன், மேலும் சில முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர். இதற்காக கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.