பிழை சினிமா விமர்சனம்

0

பிழை சினிமா விமர்சனம்

ரேட்டிங்

டர்னிங் பாய்ண்ட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ஆர்.தாமோதரன் தயாரித்துள்ள படம் ‘பிழை’.

சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள், தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர். குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்க்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் மனம் உடையும் சார்லி , மைம்கோபி , ஜார்ஜ் தங்கள் மகன்களை அடித்து விடுகின்றனர். இந்நிலையில்கிராமத்தில் இருந்து நகரத்துக்கு ஓடிப்போன ஒருவன் வசதியாக சொந்த ஊர் திரும்புகிறான். அவனைப்போல் இந்த மூன்று சிறுவர்களும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிப்போகிறார்கள். அங்கு இவர்கள் எதிர்பாராத சிக்கல்களில் மாட்டுகின்றனர். அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்பதே ‘பிழை” படத்தின் மீதி கதை.

மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் மூவரும் ஏழை தந்தை கதாபாத்திரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள். நல்ல திறமையான நடிகர்கள் என்று வேர்வையை சிந்தி நடிச்சு மீண்டும் நிருபிக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பு திறமைக்கு தமிழ் சினிமாவில் உரிய அங்கிகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறலாம்.

சும்மா சொல்லக்கூடாது காக்காமுட்டை ரமேஷ், அப்பா பட நாஷாத், கோகுல் ஆகிய மூவரும் கலக்கியிருக்கிறார்கள்.

நாகவேந்திரா சிரஞ்சீவி , பிருந்தா, அரவிந்த் காந்த் வினோத், அபிராமி, மனிஷாஜித், எல்லையா, பரோட்டா முருகேசன் ஆகியோர் கிடைத்த கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர்.

பள்ளிக்கூடம் தொடர்பான கதைக்கு பைசல் இசை, பாக்கியின் ஒளிப்பதவும், ராம் கோபியின் படத்தொகுப்பும் கூடுதல்பலம்.

சிறுவர்களை மையப்படுத்தி , அப்பா – மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், கல்வியின் மகத்துவத்தை சமூக அக்கறையோடு அழுத்தமான திரைக்கதை மூலம் இந்த காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான படம். பெற்றோர்க்கும் குழந்தைகளுக்கும் இடையில் சரியான புரிதல் இல்லாததே பிழை என்பதை சரியான கதை அம்சத்துடன் இயக்கியுள்ளார் இயக்குனர் ராம் வேல் கிருஷ்ணா.

மொத்தத்தில் கதையை மட்டும் நம்பி சிறுவர்களைமையப்படுத்தி கல்வியின் மகத்துவத்தை சமூக அக்கறையோடு உணர்த்தும் ‘பிழை”.

நம்ம பார்வையில் ‘பிழை” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.