பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘கலைஞர் 100’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
267

பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘கலைஞர் 100’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்த் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் பெருமை பெற்ற ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் சினிமா தொடர்பான அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் தொகுத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செய்தியாளராக பணியாற்றிய போது, தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அதையே உணர்வுபூர்வ பணியாக மேற்கொண்டார். எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருந்தார். இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

2002-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட பத்து லட்சம் ரூபாய் வழங்கியது.

மேலும், திரு ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ என்னும் நூலை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார்.

தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும்.

தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.

அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ‘கலைஞர் 100’ என்கிற நூலாக மலர்ந்திருக்கிறது.

இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு நூலை பெற்றுக்கொண்டு, வாழ்த்து பெற்றார்.