பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் – ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்

0
148

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலம் – ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான திரைக்கதை மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி, முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார். தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜூக்கு, கமல்ஹாசன் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தநிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் நன்றி கூறி அதனுடன் ’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என்று அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.