பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

0
49

பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி மரியாதை ஸ்டாலின் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உள்ளிட்டோர் உடனிருந்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் பலரும் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய தம்பி உதயநிதி மக்கள் பணியில் என்றும் மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.