பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் கார்த்தி

0
31

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் கார்த்தி

சிவகுமாரின் இளையமகன் நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா, சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இன்று 44 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார் நடிகர் கார்த்தி.

இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது.

அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.