பிரம்மாண்டமாக திரையரங்குகளில் நாளை வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’…குஷியில் ரசிகர்கள்!!

0
72

பிரம்மாண்டமாக திரையரங்குகளில் நாளை வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’…குஷியில் ரசிகர்கள்!!

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்த ‘வலிமை’ படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கான அதிகாலை சிறப்புக் காட்சிக்கான முன்பதிவும், முதல் நாளுக்கான முன்பதிவும் 21ஆம் தேதியே முடிந்து விட்டது. அதே சமயம் அதற்கடுத்த நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளுக்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அடிக்கடி தியேட்டர்களை மூடுவதும், 50 சதவீத இருக்கை அனுமதி என்பதுமாக தியேட்டர்காரர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கான தற்போதைய முன்பதிவு நிலவரம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.