பிரண்ட்ஷிப் விமர்சனம்

0
19

பிரண்ட்ஷிப் விமர்சனம்

லாஸ்லியா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி. இவரின் குழந்தைத்தனமாக அணுகுமுறையால் தன் வகுப்பில் ஹர்பஜன்சிங், சதீஷ் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக பழகுகிறார். லாஸ்லியா கேன்சரால் அவதிப்படுகிறார் என்பதை உணர்ந்த நண்பர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து அதிலிருந்து மீண்டு வர உதவி செய்கின்றனர். நோயிலிருந்து மீண்டு வந்தாலும், அரசியல்வாதியின் பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்யப்படுகிறார். இதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தான் என்று சதி வலைகள் பின்னப்பட, அதிலிருந்து நண்பர்கள் தப்பித்து, எவ்வாறு கொலை செய்த அரசியல்வாதியை கண்டுபிடித்து கொடுத்தார்கள்? நீதி கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

இதில் கிரிக்கெட்வீரர் ஹர்பஜன்சிங்,சிறப்பு தோற்றத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன்,லாஸ்லியா,சதிஷ்,ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எம்.எஸ்.பாஸ்கர், பழ .கருப்பையா, வெங்கட் சுபா,மைம் கோபி ,வேல்முருகன்,வெட்டுக்கிளி  பாலா ஆகியோர் படத்தின் ஒட்டத்திற்கு துணை போகின்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சாந்த குமார் ஒளிப்பதிவு, டி.எம். உதயகுமார் இசை, தீபக் எஸ். தவாரக்நாத் படத்தொகுப்பு என மூவரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

இது பெண்களுக்கான படம் மட்டுமல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு ஒரு பாடம் அதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது ஆக்ஷன் கிங் அர்ஜுன் சிங்கின் கடைசிக் காட்சி. இயக்குனர் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா ஆகிய இருவரும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.

மொத்தத்தில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து இயக்கியிருக்கும் பிரண்ட்ஷிப் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு சொல்லித்தரும் பாடம்.