பிரச்சனை- போராட்டம்-கொலை – “நண்பா” படத்தில் மூன்று ஜோடி!
இணைபிரியா மூன்று நண்பர்கள் சாதியை தாண்டி , மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா? என்ன பண்ணியது இந்த சமுகம் என்பதை மிக அழகாக புதுமுகங்களை வைத்து கே.வி.முகி இயக்கி உள்ளார். டி.சிவபெருமாள் தனது சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் “நண்பா” படத்தை தயாரித்துள்ளார்.
புதுமுகங்கள் பிரபு – மீனா ,ஆகியோருடன் கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி , கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
துரைராஜ் படத்தொகுப்பையும், ஜெயம் ஒளிப்பதிவையும், டென்னிஸ் வல்லபன் இசையையும், ஆர்.என்.முரளி சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், இளையகம்பன் பாடல்களையும், கே.வி. முகி கதை திரைக்கதை, வசனம் , இயக்கத்தையும் , டி.சிவபெருமாள் தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.
PRO: விஜயமுரளி, கிளாமர் சத்யா
சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் ” நண்பா” விரைவில் திரைக்கு வர உள்ளது.