பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர்!

0
16

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர்!

அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் “தீனி” படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5 அன்று வெளியாகிறது. இயக்குநர் அனி I.V. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios இப்படத்தினை தயாரிக்கின்றன.

படத்தை தயாரிக்கும் BVSN பிரசாத் படம் பற்றி கூறியதாவது…

இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 அன்று காலை 11 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை வெளியிடவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடகஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் திரைவெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

நடிகர் குழு

அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு

இயக்குநர் – அனி I.V. சசி

தயாரிப்பாளர் – BVSN பிரசாத்

வழங்குபவர் – பாபிநீடு B

ஒளிப்பதிவாளர் – திவாகர் மணி

இசையமைப்பாளர் – ராஜேஷ் முருகேசன்

பாடல்கள் – ஶ்ரீமணி

வசனம் – நாக சந்தா, அனுஷா, ஜெயந்த் பனுகண்டி

கலை இயக்கம் – ஶ்ரீ நாகேந்திரா தங்கலா

படத்தொகுப்பு – நவீன் நூலி