பிசாசு-2 படத்துக்காக நடிகை ஆண்ட்ரியாவுக்கு கோடிகளில் சம்பளம்? எதற்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா கொரோனா பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சமீபத்தில் பூரணமாக குணமானார்.
தளபதி விஜய்யுடன் முதன் முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா. இசை, நடிப்பு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தமிழ் திரையுலகில் வட்டமடிக்கிறார். வெரைட்டியான ரோல்கள் மூலம் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் ஆண்ட்ரியா. தனுஷின் வடசென்னை படத்தில் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார்.
ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016-ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.
இதனையடுத்து தற்போது பிசாசு-2 வேலைகளில் பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆடை படத்தில் அமலா பால் முழு நிர்வாணமாக ஆடையே அணியாமல் நடித்து மிரட்டி இருந்தார்.