‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – மிஷ்கின் நம்பிக்கை

0
4

‘பிசாசு 2’ படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – மிஷ்கின் நம்பிக்கை

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

Highlights of Y’day @TwitterSpaces- @DirectorMysskin

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், தான் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும், இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.