பாரதிராஜாவின் தேனி வீட்டில் நடிகர் கார்த்தியுடன் கருணாஸ்… சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

0
72

பாரதிராஜாவின் தேனி வீட்டில் நடிகர் கார்த்தியுடன் கருணாஸ்… சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் தேனியில் நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ’விருமன்’ படத்தை 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நடிகர் கார்த்தியுடன் நடிகர்கள் சூரி, கருணாஸ், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் ஃபார்ம் ஹவுஸில் இருக்கும் புகைப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் வெளியிட்டிருக்கிறார்.

தோட்டத்தில் வீட்டிலும் உற்சாகமுடன் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் படத்தில் பின்னணியில் பாரதிராஜா புகைப்படத்தில் இருக்கும் புகைப்படமும் உள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.