பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் கமல் ஹாசன் தலைமையில் திருமணம்!

0
24

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் கமல் ஹாசன் தலைமையில் திருமணம்!

திரைப்பட பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப், சூரறைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹிட் பாடல்களை எழுதியதோடு யோகி, உயர்திரு 420, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்துக் கொண்டு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பின்னர் அவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில் விரைவில் சினேகனுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திருமணம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.