பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம்!!

0
124

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம்!!

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.

மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர்,  திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள், புகழ்பெற்ற கன்னட நிறுவனமான ஆர்.சி.ஸ்டுடியோவின் அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக ஸ்டைலீஷ் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்கவுள்ளார்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது, இப்படம் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக அமையும். ஆர் சி ஸ்டுடியோஸ் கர்நாடகாவில் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின்  தயாரிப்பில், இந்த ஆண்டு 5 பெரிய படங்கள் திரைக்கு வருகிறது. இயக்குநர் ஆர் சந்துரு இதுவரை பணியாற்றிய படங்கள் மிக ஸ்பெஷலானதாக  இருக்கும் அந்த வகையில்,  இந்தப் படமும் பல சிறப்புகளை கொண்டதாக இருக்கும். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு பிரத்யேக விருந்தாக  இப்படத்தின் டைட்டிலை வெளியிட ஆர் சி ஸ்டுடியோஸ்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விஜயேந்திர பிரசாத் திரைக்கதை மேற்பார்வை, கிச்சா சுதீப் நடிப்பு மற்றும் இயக்குநர் ஆர் சந்துரு இயக்கம் என இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கவுள்ள திரைப்படத்திற்காக ஒட்டு மொத்தத் திரையுலகமும் வெகு ஆவலுடன்  எதிர்பார்த்துக்  காத்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அவை அனைத்துமே  வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. மதிப்புமிக்க ஆந்திரா அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். ஆர்சி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது, இப்படம் பான் இந்தியா கான்செப்ட்டை உடைத்து, உலகளாவிய திரைப்படத் தரத்தில், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்திய படமாக இருக்கும். இதன் மூலம் ஆர்சி ஸ்டுடியோஸ் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனமாக மலரும்.

இதன் மூலம் உலகளாவிய வகையில் திறமையான மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு  ஆர்சி ஸ்டுடியோஸ் வாய்ப்புகளை வழங்கும்.

இந்த மூன்று ஜாம்பவான்களும் ஒன்றிணைவது திரைத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். கிச்சாவுடன் இணைந்து ஆர்சி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிப்பது அவரது பிறந்தநாளில்  உறுதியாகியுள்ளது.