பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா காலமானார்: பத்மஸ்ரீ விருதை நிராகரித்தவர்

0
66

பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா காலமானார்: பத்மஸ்ரீ விருதை நிராகரித்தவர்

மேற்குவங்கத்தை சேர்ந்த பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி சந்தியா முகர்ஜி, மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 90.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகியான சந்தியா முகோபாத்யா என்கிற சந்தியா முகர்ஜி. 80 ஆண்டுகளாக இந்தி மற்றும் பெங்காலி படங்களில் பாடி வருகிறார். மேற்கு வங்கத்தின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதையும், கடந்த 2011-ம் ஆண்டு இவர் பெற்றுள்ளார். சந்தியா முகர்ஜி, கடந்த 1970-ம் ஆண்டு வெளிவந்த நிஷி பத்மா (Nishi Padma) என்ற பெங்காலி படத்தில், “Ore Sakol Sona Molin Holo” என்கிற பாடலைப் பாடியதற்காக, சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது வென்றார்.

கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தில், சந்தியா முகர்ஜிக்கு 2022-ம் ஆண்டுக்கான பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது, அதை ஏற்க மறுத்து இருந்தார். உரிய நேரத்தில் வழங்கப்படாமல், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மரியாதை கிடைத்ததால், அவர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். ஜூனியர் ஆர்டிஸ்ட், அதாவது இளைய கலைஞருக்கு வேண்டுமென்றால், பத்மஸ்ரீ விருது பொருந்தும் என்றும், 80 ஆண்டுகளாக பாடி வரும் தன்னைப் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ விருது வழங்குவது உரிய அந்தஸ்தாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

எஸ்.டி. பர்மன், நௌஷாத் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் சந்தியா முகர்ஜி. இந்நிலையில், கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமாகிய நிலையில், இணை நோய்களாலும், உறுப்புகள் சரியாக செயயல்படாமலும் அவதிப்பட்டு வந்தார் சந்தியா முகர்ஜி. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள வருகின்றனர். பழம்பெரும் பிரபலங்கள் லதா மங்கேஷ்கர், சந்தியா முகர்ஜி, பப்பி லஹரி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.