பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே. சங்கர் காலமான தினமின்று!

0
133

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே. சங்கர் காலமான தினமின்று!

கே. சங்கர் ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் எடிட்டராக தனது சினிமா உலக பயணத்தை தொடங்கினார். பின்னர் இயக்குனாரானார்.

இந்த கே.சங்கர் இயக்கிய குடியிருந்த கோயில், அடிமைப் பெண், ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, கைராசி, சந்திரோதயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைக் காவியங்கள் ஆகும்.

இவர் தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கிய சிறப்புக்கு உரியவர் ஆவார்.

From Left: Director K.Shankar,Makkal Thilagam MGR, M.C.Ramamurthy(Arasakatalai Producer), Periyaver M.G.Chakrapani

கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்.டி.ராமராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளது இவரது தனிச் சிறப்பாகும்.

பின்னாளில் இந்தி சினிமாவில் புகுந்து தேசத்துக்கே கனவுக்கன்னியாக மாறியவர் ஹேமாமாலினி. அவருக்கு முதன் முதலில் திரையில் வாய்ப்பு கொடுத்தவர் சாட்சாத் நம்ம சங்கரேதான். 1963ல்வெளியான இது சத்தியம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார் சங்கர்.

எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி ஆகிய மூவரையும் வைத்து பல இடங்களை கொடுத்த சங்கர், பின்னாளில் தொடர்ந்து பக்திப்படங்களை இயக்கி இறையருட் செல்வர் என்ற பட்டத்துக்கே சொந்தக்காரர் ஆனார்.

ஏராளமான மினி நட்சத்திரப்பட்டாளங்களை வெளி நாட்டில் வைத்து படம்பிடித்து 1978ல் வருவான் வடிவேலன் என்ற படத்தை வெளியிட்டார் டைரக்டர் சங்கர். அப்படத்தைக் காண தியேட்டர்கள் ஒவ்வொன்றும் பெண்கள் படையெடுக்கும் கோவிலாக மாறிப்போன ஆச்சர்யமானது தனிக் கதை

இன்றைக்கு ஒவ்வொரு மேடையிலும் இளையராஜா புகழ் பாடுகிறதே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ என்ற பாடல்.. அதை தனது தாய் முகாம்பிகை படத்தில் உருப்பெறச்செய்தவர் இறையருட்செல்வர் டைரக்டர் சங்கர்தான்..

இன்றைய நினைவு நாளில் அவரைப்பற்றி கொஞ்சமாவது நினைப்போம்.