பர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா?

0
45

பர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : 

தீயாக பரவும் போட்டோ…

விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா?

சினிமாவில் போராடி தனக்கான இடத்தைப் பிடித்து தனியாக தெரியக் கூடியவர் விஜய் சேதுபதி. முன்னணி நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் ஏன் சிறிய கேரக்டர் என்றாலும் முழு ஈடுபாடோடு நடிக்கக் கூடியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த விஜய் சேதுபதி, மாஸ்டரில் பவானி கேரக்டரில் வில்லத்தனத்தை ரசிக்க வைத்திருக்கிறார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி திரையில் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிரபலமாக இருந்தாலே பிரச்னை தான் என்று திரையுலகினர் கூறுவது போல் சமீபத்தில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானது சர்ச்சையானது. பின்னர் அந்தப் படத்திலிருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும் அவருக்கு நண்பர்கள் சார்பாக கேக் பரிசளிக்கப்பட்டது. அதனை அவர் பட்டாக் கத்திகள் கொண்டு வெட்டிக் கொண்டாடியதாக புகைப்படம் ஒன்று காட்டுத் தீயாக பரவி வருகிறது. அதில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது?

 

ரவுடிகள் பட்டாக்கத்தி கேக் வெட்டிய போது கைது செய்யும் போலீசார் ஒரு முன்னணி நடிகர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் போது அதே போன்ற நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியை பலரும் சமூகவலைதளங்களில் எழுப்பியுள்ளனர். மேலும் இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.