பருத்திவீரன் சர்ச்சை : ”பிரதர் இந்த சீனெல்லாம் செல்லாது… ஏமாத்தின பணத்த திருப்பித் தரணும்” – சமுத்திரக்கனி மீண்டும் அறிக்கை!

0
406

பருத்திவீரன் சர்ச்சை : ”பிரதர் இந்த சீனெல்லாம் செல்லாது… ஏமாத்தின பணத்த திருப்பித் தரணும்” – சமுத்திரக்கனி மீண்டும் அறிக்கை!

அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான இந்தப் பிரச்சினையில் பருத்திவீரன் தொடர்பான ஏராளமான தகவல்கள் வெளியாகின.

அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசியது பெரும் பேசு பொருளாக மாறியது. பிரபலங்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஞானவேல் ராஜா அமீரை மிகவும் தரக்குறைவாகவும் அருவருக்கத்தக்க உடல் மொழியாலும் பேசி கேவலப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது, அதற்காக உண்மையை பலி கொடுக்க முடியாது என சசிகுமார் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கரு பழனியப்பன் கொடுத்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.

இந்த வரிசையில் நடிகர் சமுத்திரகனி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொதுவெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்.”

“அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் ‘பருத்திவீரன்’ படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம், அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேலை பார்த்தவங்க. ‘நீங்க தான் அம்பானி பேமிலியாச்சே..’ காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.