பணத்தை திருடிய பிரபல மீடுசர்ச்சை நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்

0
121

பணத்தை திருடிய பிரபல மீடுசர்ச்சை நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பெங்காலி நடிகையான ரூபா தத்தா. மீடுசர்ச்சையின் போது இவர் இயக்குனர் அனுராக் கஷ்யாப் தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடியதாக நடிகை ரூபா தத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா புத்தகக் கண்காட்சிக்கு சென்ற நடிகை ரூபா தத்தா, அங்கிருந்து பணத்தை திருடியதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் கூறும் போது, “ அவரது பேக்கில் இருந்து 65,760 ரூபாயை கைப்பற்றினோம். பணம் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது அதற்கான சரியான விளக்கத்தை அவர் கொடுக்க வில்லை.

தொடர்ந்து விசாரித்த போது கண்காட்சிக்குள் இருந்த கூட்டத்தை, பயன்படுத்தி பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பேக்கை தொடர்ந்து சோதனை செய்து போது அதிலிருந்த ஒரு டைரியை நான் கைப்பற்றினோம். அந்த டைரியில் அவர் இதுவரை எவ்வளவு பணத்தை திருடியிருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் இருந்தன.” என்று கூறினர். மேலும் டைரியில்,கொல்கத்தாவில் உள்ள நெருக்கடியான இடங்களின் பெயர்கள் அடங்கியிருந்தன. இது ரூபா திருட வைத்திருக்கும் பொதுவான இடங்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக கண்காட்சிக்குள் அவர் அங்கும் இங்கும் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தேகத்தோடு அவரை சோதனை செய்த போது அவர் பேக்குகளை குப்பைத்தொட்டிக்குள் போட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரை பேக்கை சோதனை செய்த போது, அவருடைய பேக்கில் நிறைய பணம் இருந்த பைகள் இருப்பது. அதனை சோதனை செய்த போது, அதில் 65,760 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், சட்டப்பிரிவு 379/411 கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் தத்தா கூறும் போது, “ தான் குடித்த குளிர்பான பாட்டிலை குப்பைத்தொட்டியில் போடும் போது, அந்தக்குப்பை தொட்டியில் பை கிடந்தது. அந்தப்பையை தூக்கும்போது, போலீஸார் என்னை கைது செய்தனர். போலீஸ் தேடிய பை என்னுடையது அல்ல. அது நான் குப்பைத்தொட்டியில் இருந்து தூக்கிய பை” என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

பிரபல நடிகையே வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.