படம் தோல்வி, எல்லா சொத்தையும் விற்றுவிட்டேன்.. சர்வைவரில் நடிகர் அர்ஜுன் உருக்கம்

0
26

படம் தோல்வி, எல்லா சொத்தையும் விற்றுவிட்டேன்.. சர்வைவரில் நடிகர் அர்ஜுன் உருக்கம்

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், உலக அளவில் பாப்புலர் ஆன சர்வைவர் நிகழ்ச்சி தமிழில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோவில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. அதில் அர்ஜுன் மிகவும் எமோஷ்னலாக பேசி இருக்கிறார்.

அவர் கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன்.

அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்.

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.