படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி, இயக்குனர் படுகாயம்

0
28

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி, இயக்குனர் படுகாயம்

படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.