படப்பிடிப்பில் இப்படியொரு அர்ப்பணிப்பா! கலங்க வைத்த நடிகை சமந்தாவின் செயல்..!
நடிகை சமந்தா ஆக்சிஜன் எடுத்துக்கொண்டே வெப் சீரிஸில்
நடித்ததாக, நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.
வருண் தவான் மற்றும் சமந்தா இருவரும், சிட்டாடெல் ஹனி பனி என்ற வெப் சீரிஸில் இணைந்து நடித்துள்ளனர். இந்தநிலையில், இந்த படப்பிடிப்பின்போது சமந்தா உடல் நல பிரச்சனைகளால் கடுமையாக அவதியடைந்ததாக, வருண் தவான் கூறியுள்ளார். ஒருநாள் படப்பிடிப்பின் தளத்திலேயே, ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தி சமந்தா சுவாசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மற்றொரு முறை, நடித்துக் கொண்டிருக்கும்போதே சமந்தா தடுமாறி கீழே விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, மயோசிடிஸ்
பிரச்னையால் சிட்டாடெல் ஹனி பனி தொடரிலிருந்து விலக நினைத்தாக சமந்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.