“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்

0

“நேர் கொண்ட பார்வை” ஆகஸ்டு 8 – ல் ரிலீஸ்

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. எச். விநோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக தயாரான இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீ நாத், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான நேர் கொண்ட பார்வை திரைப்படம் வருகிற ஆகஸ்டு 8 – ம் தேதி, வியாழக்கிழமை, வெள்ளித் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.