நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’

0
30

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகள் மேல் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனது படத்திற்குச் சூட்டி பரபர படப்பிடிப்பை துவங்கினார் பிரபுதேவா. ஆனால், படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னரும் இரண்டு வருடங்களாக வெளியாகாமல் இருந்தது ’பொன் மாணிக்கவேல்’. கடந்த வருடம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்புடன் வந்தாலும் நிதி சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ’பொன் மாணிக்கவேல்’ நவம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. ட்ரெய்லருடன் படம் வெளியாகும் தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு. ட்ரெய்லரில் வில்லன்களை மிரட்டும் காவல்துறை அதிகாரியாக கவனம் ஈர்க்கிறார் பிரபுதேவா. ஆனால், சிலைக்கடத்தல் சம்மந்தப்பட்ட எந்த காட்சிகளும், வசனங்களும் வரவில்லை.