”நெகட்டிவ் எல்லாம் பாசிட்டிவ் ஆகும் காலமிது”: கொரோனாவிலிருந்து நலமடைந்த கீர்த்தி சுரேஷ்

0
66

“நெகட்டிவ் எல்லாம் பாசிட்டிவ் ஆகும் காலமிது”: கொரோனாவிலிருந்து நலமடைந்த கீர்த்தி சுரேஷ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நலமடைந்து இருக்கிறார்.

கொரோனாவின் மூன்றாவது அலைப் பரவலால் கமல்ஹாசன், வடிவேலு, மகேஷ் பாபு, அருண்விஜய், த்ரிஷா, மீனா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பாதிப்படைந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷும் கடந்த 7 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். தனது வீட்டிலேயே மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது.

இதனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லா புன்னகையுடன் மஞ்சள் நிற உடையில் புகைப்படங்களைப் பகிர்ந்து ”நெகட்டிவ் எல்லாம் பாசிட்டிவ் ஆகும் காலமிது. உங்கள் அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று உற்சாகமுடன் கொரோனா தொற்றிலிருந்து நலமடைந்து இருப்பதை தெரிவித்துள்ளார்.