நிவின் பாலி படத்தில் இணைந்த சூரி மற்றும் மிஷ்கின்

0
41

நிவின் பாலி படத்தில் இணைந்த சூரி மற்றும் மிஷ்கின்

2007-ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனராக ராம். அதன்பிறகு ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் அவர் அடுத்து நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூரி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் இன்று படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக ‘பயணிப்பதில்’ பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு அதனுடன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின் அந்த படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறார் அந்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.