நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்

0
1

நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்

திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கருப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்றும் வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 1989, 1996, 1999 ஆகிய வருடங்களில் தனக்கு வழங்கப்பட்ட 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்புகளை தொடர்ந்து கோல்டன் குளோப் விருது அமைப்பில் கருப்பினத்தவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன.