நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்

0
77

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள” உழைக்கும் கைகள்” படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் நாமக்கல் எம்.ஜி.ஆர்..

கிரண்மை, போண்டாமணி, பிரேம்நாத், மற்றும் பலர் நடித்துள்ள இதன் படத்தொகுப்பை எஸ்.ஜே.பாரதி, ஒளிப்பதிவை சிவா, தயாரிப்பு வடிவமைப்பை சதாசிவ மூர்த்தி, மற்றும் செங்கோட்டை கணேஷ் பண்ணையார் ஆகியோர் கவனித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர், நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி “உழைக்கும் கைகள்”  திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர்கள் குமரகுருபரன் மற்றும் சூர்யா இருவரும் கூறுகிறார்கள்.