நான் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்…! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர்

0
140

நான் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்…! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்புவின் ’சிலம்பாட்டம்’, தனுஷின் ‘மரியான்’ படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் தனது புதிய படமான ‘ஒருத்தி’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன்.

அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன், என்றார். விநாயகனின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விநாயகன் கடந்த 2019-ம் ஆண்டு பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.