‘நான் சிரித்தால்’ திரை விமர்சனம்

0

‘நான் சிரித்தால்’ திரை விமர்சனம்

ரேட்டிங்

நடிப்பு – ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் பாண்டியராஜன், முனீஷ்காந்த், ரவிமரியா, ஷா ரா, படவா கோபி, எருமைசாணி விஜய், பருத்திவீரன் சுஜாதா
தயாரிப்பு – அவ்னி மூவீஸ்
இயக்கம் – இராணா
இசை – ஹிப்ஹாப் தமிழா
நேரம் – 2 மணி நேரம் 18 நிமிடம்

கதை:
இஞ்சினியரிங் அரியர்ஸ் வைத்திருந்தாலும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்துவிடும். இந்த நிலையில், அவர் தனது பட்டப் படிப்பையே முடிக்காததால், ஐடி நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால், அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இதற்கிடையில், சக்கரை (ரவி மரியா) – தில்லிபாபு (கே.எஸ். ரவிக்குமார்) என்ற இரண்டு தாதாக்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்கள். தில்லிபாபுவைக் கொல்ல சக்கரை மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்க,இந்த திட்டத்தில் தவறுதலாக ஆதி, ரவிகுமார் இருக்கும் இடத்திற்கு செல்ல, பயப்படுவதற்கு பதிலாக சிரித்து விடுகிறார். இதனால்ஆதியும்; அவனது நண்பர்களும் ரவிகுமாரிடம் சிக்குகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.]

எப்போதும் ஜாலியாகவும், இயல்பாகவும் வந்து செல்லும் ஹிப்ஹாப் ஆதி , தன் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்த கடினமாக உழைத்துள்ளார்.

நாயகி ஐஸ்வர்யா மேனனை கதையோடு ஒன்றவைத்திருக்கிறார் இயக்குனர் ராணா. ஐஸ்வர்யா மேனனுக்கு இந்த படம் நிச்சயம் கைகொடுக்கும்.

வில்லன்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இதில் ரவிமரியா கே.எஸ்.ரவிக்குமாரை மிஞ்சுகிறார்.

ஆதியின் ‘அப்பாவாகவும், ஆம்புலன்ஸ் ட்ரைவராகவும்” வரும் படவா கோபி, முனீஸ்காந்த், சாரா, எருமசாணி விஜய் ஆகியோரின் காமெடி காட்சிகள் பலத்த கைதட்டலை பெறுகிறது.

ஆதியின் இசை மற்றும் பின்னணி இசை ஒகே.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் இருவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

கெக்க பெக்க எனும் 20 நிமிட குறும்படத்தை ரசிக்க வைத்த இயக்குனர் ராணா, ஒரு இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றிய போது திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.

மொத்தத்தில் அவ்னி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர்.சி தயாரித்துள்ள ‘நான் சிரித்தால்” படத்தை பார்த்தால் சிரிப்பு வரும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை ரிஸ்க் எடுத்து பார்க்கலாம்.

நம்ம பார்வையில் ‘நான் சிரித்தால்” படத்துக்கு 2 ஸ்டார் தரலாம்.