நான் சினிமாவில் கமல் சாரை பின்பற்றுவேன்: ‘உற்றான்’ நாயகன் ரோஷன்

0

நான் சினிமாவில் கமல் சாரை பின்பற்றுவேன்: ‘உற்றான்’ நாயகன் ரோஷன்

உற்றார் உறவுகளை எல்லாம் திரை அரங்குகளுக்குள் அழைக்கும் வகையில் தயாராகி இருக்கும் படம் உற்றான். ஓ. ராஜா கஜினி எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தை Sai cinemas தயாரித்துள்ளது.

உற்றான்’ படத்தில் நாயகன் ரோஷன், நாயகி ஹிரோஷினி , மற்றும் வெயில் பிரியங்கா இந்த படத்தில் நடித்து உற்றான் ப்ரியங்கா ஆகிறார் . முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிசங்கர், வேலராமமூர்த்தி, மதுசூதனன், ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர் .‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் . இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர்.

ரகுநந்தன் இசையில், மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள். நடனத்தை எஸ்.எல். பாலாஜி, ராதிகா, சாய்பாரதி, மற்றும் ஹரீஷ் கார்த்திக் ஆகியோர் இயக்கியுள்ளனர். பில்லா’ ஜெகன் சண்டைக்காட்சிகளை இயக்கியிருக்கிறார். படத்தொகுப்பை எஸ்.பி. அகமது கையாண்டுள்ளார். கலை இயக்கம் மோகன மகேந்திரன், பத்திரிகை தொடர்பு ரியாஸ் கே அஹமது.

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் உற்றான் திரைப்படத்தின் இயக்குநர் ஓ.ராஜாகஜினி மற்றும் கானா சுதாகர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாநிலத் தலைவரும், உற்றான் பட புதுமுக நாயகன் தந்தையுமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆக வேண்டும் என்று திரையுலகக்கு வந்த நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்தது பற்றி நிருபர் கேள்விக்கு ரோஷன் கூறியதாவது:

நான் சிறுவயது முதற்கொண்டு சினிமாவை நேசித்தது வருகிறேன்.  எனக்கென்று திரைத் துறையில் என்ன வேலையென்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்துடன் இருக்கிறேன்.  நான் உதவி இயக்குநாகவும் பணியாற்றியிருக்கிறேன். அடுத்து இயக்குநர், தயாரிப்பாளர் என எந்த பணி அமைத்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்வேன். லைட் பாய் வேலை கிடைத்திருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்திருப்பேன். எக்காரணம் கொண்டும் நான் நேசிக்கும்  சினிமாவை விட்டு விலகியிருக்க மாட்டேன்.

நான்  சிறுவயதில் இயக்குநர்களை கண்டு வியப்பேன், காரணம் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ரெய்ன் என்றால் மழை வரும். ஸ்டாப் என்றதும் மழை நின்று விடும். சினிமா உலகில் இயக்குநர்களை, கடவுள் போல உணர்வேன். ஆகவே இயக்குகநர் பணி எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும் இப்போது நடிகன் –

நான் ஒரே மாதிரியான கேரக்டர் இல்லாமல் அனைத்து வகையான கேரக்டரிலும் கதைக்கும், வித்தியாமான ரோலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். நான்  நடிப்பில் கமல் சாரை பின்பற்றுவேன்.

இவ்வாறு ரோஷன் கூறினார்.

#Utraan #Utraanmovie #kalaipoongatv